Dr.சத்திய மூர்த்தி .DSMS., MDHMS.,

சித்த மருத்துவம் என்றால் என்ன?

சித்த மருத்துவம் என்பது  மக்களுக்காக சித்தர்கள உருவாக்கப்பட்ட மருத்துவம். வாழ்க்கை நெறிமுறைகளை அவர்கள் எப்படி வாழ வேண்டுமென்பதற்கான உரிய நெறிமுறைகளைத் தொகுத்தவர்கள் சித்தர்கள்.

எந்தவிதமான வசதியும் இல்லாத காலத்திலும் இந்த நோய்க்கு இந்த மருந்து எனவும் அது எவ்வளவு காலத்தில் தீரும் என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதை அறிவியலும் உணர்ந்து ஏற்றுக் கொள்ள பல நூறு ஆண்டுகள் ஆயின. எடுத்துக்காட்டாகக் காமாலை நோய்க்குக் கீழாநெல்லியைச் சித்தர்கள் மருந்தாகக் கொடுத்தனர்.ஆனால் இப்போது தான் வெளிநாடுகளில் கீழாநெல்லியை மருந்தாக அறிவித்துள்ளனர்.

சித்தர்கள் கூறிய வழியில் மூலிகைகளை மட்டுமல்லாது பாடானங்கள், சீவ பொருட்கள் இவை அனைத்துமே நாங்கள் மருந்தாகப் பயன்படுத்துகிறோம்.அண்மையில் இலண்டன் பல்கலைகழகத்தில் பாடானம் என்று சொல்லக்கூடிய ஆர்சனிக்கை ஆய்வு செய்து, அது புற்று நோய்க்கு மிகச் சிறந்த மருந்து என அறிவித்துள்ளனர்.


சித்தமருத்துவத்தின் 6 முக்கிய அங்கங்கள்

1 .யோகம்

2 .ஞாணம்

3 .வாதம் (ரசவாதம்)

4 .வைத்தியம்(மருத்துவம்)

5 .ஜோதிடம்

6 .மாந்ரிகம் 

இந்த 6 பிறிவுகளும் மனிதர்கள் உடல் மற்றும் மண நலத்தோடும் 

நெடுநாள் வாழ உதவுகிறது

 

மனித உடலில் தோன்றும் நோய்கள்

மனித உடல், ஏழுவகையான உடற் தாதுக்களால் அமைந்தது. அவற்றுக்கு, ஒழுங்கீனமான உணவு வகைகளை உணவாக அளிப்பது; வளி, அழல், ஐயம் என்னும் மூன்று உடல்சக்திகள் குறையவும், மிகவும் காரணமாகின்ற தொழில்களைச் செய்தல்; உணவு முறைகளால் உடல் சக்திகள், உடலுக்குள்ளிருந்து போராடச் செய்தல்; ஆகாத உணவு முறைகளால் தாதுக்களையும், உடல் சக்திகளையும் பழுதடைய செய்தல்; தாதுக்களின் செயலையும் சக்திகளின் செயலையும் மாறுபடச் செய்தல் போன்ற குற்றங்களினால் உடலில் தோன்றும் குணங்களின் காரியமே ‘நோய்’ எனப்படுகிறது.
வாத பித்த ஐய நோய்கள்
வாதம், பித்தம், ஐயம் என்னும் மும்மூலங்களினால், பொறியிலும் சிரசிலும் சூடுண்டாகும். அதனால் கனன்று எழுகின்ற வாயுவினால் சூலை நோய் உண்டாகும். வாதத்தினால் மேகநோய், விரணம், சுரமும் வரும்; பித்தத்தினால் கிராணி நோய் வரும்; வாய்வினால் குன்ம நோய் உண்டாகும். போதைப் பொருள்களினாலும், அளவு கடந்த போகத்தாலும் மேக நோய் தோன்றும். மேக நோய் இருபத்தொன்றும் அதனைத் தொடர்ந்து பிறநோய்களும் நீரிழிவு நோயும் உண்டாகும். பித்தம், வெப்பமான நோய்களும் வாதம், சீதளம் தொடர்பான நோய்களும் ஐயம், கபம் தொடர்பான நோய்களும் வாயுவின் விகற்பத்தினால் இம்மூன்று வகை நோய்களும் உண்டாகும்133 என்றதனால், நோய் உண்டாவதற்கான அடிப்படையாக அமைகின்ற காரணங்கள் உரைக்கப் பட்டுள்ளன. இதன் தொடர்பால் தொடரும் பெரு நோய்த் தொகைகள் அறியப்பட்டன.

விந்து கெட்டால் வரும் நோய்கள்
உடல் தாதுகளில் ஒன்றான விந்து, மனித உடலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘விந்து கெட்டால் நொந்து போவான்’ என்னும் பழமொழி விந்தின் சிறப்பைக் குறிப்பிட்டுக் காட்டும். விந்து உடலில் இருக்கும் வரை உடலில் உயிரும் இருக்கும் என்பர். அத்தகைய விந்து அழிந்து விட்டாலோ அல்லது ஆற்றல் குறைந்து நீர்த்துப் போனாலோ மேக நோய் வந்தடையும். விந்து அழிந்தால் உடல் மிகுந்த வெப்பத்தை அடையும். அதனால் வாயு வரும். பின்னர் வாயு நோய் வரும். அதனைத் தொடர்ந்து சூலை, குட்டம், கிரந்தி, புற்று, ஒட்டியப்புண், கரப்பான், சிரங்கு, குன்மம், நீர்க்கட்டு, மலக்கட்டு, இளைப்பு நோய், இருமல், கொடிய பேதி, கிராணி, பாண்டு, காமாலை, பீனிசங்கள் ஆகியவற்றுடன் மேலும் பல நோய்களும் வந்து சேரும். அல்லது உடலைத் தாக்கி அழிக்கும். மேக நோயுடன் கபமும் பித்தமும் சேர்ந்தால் கண்களைத் தாக்கக் கூடிய கண்ணோய்கள் அனைத்தும் உண்டாகும். பித்தம் அதிகமானால் காய்ச்சல் வரும். மேகநோய் வந்தடைந்தால் அதன் துணை நோய்களான குடல் வாதம், திமிர்வாதம், குண்டல வாயு, கழல் வாதம், பச்சை வாதம், உள் நடுக்கம், நரித்தலை வாயு, பலவித புண்கள் எல்லாம் வந்தடையும் என அறிகிறோம்

நோயை பற்றியோ அல்லது மருத்துவத்தை பற்றியோ தங்கள் ஐயம் எதுவாயினும் (9944621833) இந்த எண்னில் அழைக்கவும்

 

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola